கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே உள்ள திம்மசந்திரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன், வேப்பனஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறான். இவனும், வேப்பனஹள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவியும் காதலித்து வந்தனர்.

Advertisment

இந்நிலையில், பிப். 22ம் தேதி காலை, வேப்பனஹள்ளி பேருந்து நிலையத்தில் மாணவனும், அந்த மாணவியும் சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு அந்த மாணவனின் நண்பர்கள் ஜோடுகொத்தூர் ராஜா (26), திம்மசந்திரம் மஞ்சுநாத் (22) ஆகியோர் மது குடித்துவிட்டு போதையில் வந்துள்ளனர்.

Advertisment

shocking incident in salem...

அவர்கள் மாணவிக்கு தெரியாமல் குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து குடிக்கக் கொடுத்தனர். அதைக்குடித்த அந்த மாணவி, சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். அங்கேயே ஒரு மறைவான இடத்திற்குச் தூக்கிச்சென்ற அவர்கள் மூன்று பேரும், மாணவியை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதுகுறித்து அந்த மாணவி தன் தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதுபற்றி கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் மாணவியின காதலனான 16 வயது சிறுவனை கைது செய்தனர். அவனுடைய கூட்டாளிகள் இருவரை தேடி வருகின்றனர்.

Advertisment