Advertisment

சிறுவனை கொன்று பீரோவுக்குள் வைத்த பெண்... குமரியில் அதிர்ச்சி சம்பவம்!

shocking incident in Kumari!

கோப்புப்படம்

குமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ஜான் ரிச்சர்ட்- சகாய சில்ஜா தம்பதியினரின் மகன் ஜோகன் ரிஜி (4) கடந்த ஜனவரி 21-ம் தேதி வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று காணவில்லை. உடனே தாய் சகாய சில்ஜா மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்குமிங்கும் தேடியும் சிறுவன் ஜோகனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மணவாளக்குறிச்சி போலீசில் புகார் கொடுத்தனர்.

Advertisment

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாத்திமா (35) வுக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்ததால் அந்த கடனை தீர்க்க சிறுவன் ஜோகன் ரிஜி அணிந்திருந்த நகையைப் பறிப்பதற்கு விளையாடி கொண்டிருந்த போது அந்த சிறுவனை வீட்டுக்குள் தூக்கி சென்று நகைகளை கழற்றி இருக்கிறார். அப்போது சிறுவன் சத்தம் போட்டு அழுதுள்ளான். உடனே பாத்திமா சிறுவனின் வாயை பொத்தி மூசசை திணறடித்து கொலை செய்து சிறுவனை பீரோவுக்குள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் பீரோவுக்குள் இருந்த சிறுவனின் உடலை மீட்டதோடு பாத்திமாவையும் கைது செய்து தக்கலை மகளிர் சிறைச்சாலையில் அடைத்தனர்.

Advertisment

shocking incident in Kumari!

இந்த நிலையில் பாத்திமாவைகுண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. ஹாிகிரண் பிரசாத் பாிந்துரை செய்ததையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவு படிபாத்திமா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதையடுத்து பாத்திமாவை தக்கலை மகளிர் சிறையில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

police incident Kanyakumari
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe