Advertisment

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்!

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து ஏழு நாட்களேயான ஆண் குழந்தையை கடத்திச் சென்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அடுத்த காளியாபுரம் அருகே உள்ள நரிகல்பதி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன்,தேவி தம்பதியினர்.பாலன் தினக் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தேவி. இந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.

Advertisment

pollachi incident

இந்நிலையில், நிறை மாத கர்ப்பிணியாக இருந்த தேவி பிரசவத்துக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தேவிக்கு சுக பிரசவத்தில் ஆண் குழந்தை ஏப்ரல் 29ஆம் தேதி பிறந்துள்ளது. மே 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தேவியின் ஆண் குழந்தையை அவருடன் தங்கியிருந்த அடையாளம் தெரியாத பெண் கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலைய போலீஸார் மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவு மூலம் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அதில் குழந்தையை திருடிச் சென்ற பெண்ணின் அடையாளம் தெரிந்தது. அந்த பெண் யாரென்று விசாரித்த போது உடுமலை குறிச்சிகோட்டையை சேர்ந்த லிங்கசாமி என்பவரது மனைவி மாரியம்மாள் என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து குழந்தையை மீட்ட போலீஸார் கடத்தி சென்ற பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.மேலும் இந்த பெண் இது மாதிரி வேற குழந்தையை கடத்தி உள்ளாரா என்றும் விசாரித்து வருகின்றனர்.

Advertisment
baby government hospital kidnapped pollachi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe