Advertisment

அதிர்ச்சியை கொடுத்த சிறுமியின் வாக்குமூலம்; இன்ஸ்டா ரீல்ஸ் செய்ய அழைத்து சென்று நிகழ்த்தப்பட்ட கொடூரம்

The shocking girl's confession; Atrocity carried out to make Insta reels

இன்ஸ்டாவில் ரீல்ஸ் எடுப்பதாக கூறி அழைத்துச் சென்று பள்ளி மாணவியை இளைஞன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

கடந்த ஜூன் மாதம் எட்டாம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கோணம்காடு பகுதியில் வசித்து வந்த 12ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவர் திடீரென மாயமானார். தாயை இழந்த நிலையில் பாட்டி கண்காணிப்பில் வளர்ந்து வந்த சிறுமி திடீரென காணாமல் போனது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. உறவினர்களும் குடும்பத்தாரும் பல இடங்களில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் பாட்டி குளைச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

Advertisment

இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் மாணவி தங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று மாணவியை மீட்ட போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவலை அந்த மாணவி வெளியிட்டார்.

காட்டாத்துறை பகுதியைச் சேர்ந்த சிஜின் என்ற 23 வயதான இளைஞனுடன் இன்ஸ்டாகிராமில் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 'இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்யலாம் வா' என அருகில் உள்ள பூங்காவிற்கு சிஜின் அந்த மாணவி அழைத்துள்ளார். மாணவியும் அவரை நம்பி சென்ற நிலையில் அங்குள்ள மலைப்பகுதியில் வைத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தசிஜின், சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டான். தொடர்ந்து எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்த மாணவி, அவருடைய உறவினர் வீட்டுக்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் சிஜினை போலீசார் கைது செய்துள்ளதோடு பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு பிறகு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். சிஜின் மீது போக்சோ உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

incident kanniyakumari police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe