Advertisment

தாயை கொன்று வீட்டுக்குள்ளேயே புதைத்த மகன்; போலீசார் விசாரணையில் திடுக் வாக்குமூலம்

 Shocking confession in police investigation;thittakudi incident

Advertisment

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கிராமம் ஒன்றில் பெற்ற மகனே தாயை கொலை செய்து வீட்டுக்குள் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் கொலைக்கான காரணம் குறித்துமகன் கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ளது தொளார் கிராமம். இங்கு தாயுடன் வசித்து வந்தவர் சேவாக். இவர் தனது தயார் கஸ்தூரியுடன் வசித்து வந்தார். திடீரென கஸ்தூரி காணாமல் போன நிலையில் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு புகார் கொடுத்தனர். சேவாக்கின் வீட்டிற்கு சென்ற போலீசார் ஆய்வு செய்ததில் வீட்டுக்குள்ளேயே சடலம் புதைக்கப்பட்டது தெரியவந்தது. தோண்டி பார்த்தபோது அது கஸ்தூரியின் உடல் என்பது தெரியவந்தது. கஸ்தூரி வைத்திருந்த செல்போனை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் செல்போனை சேவாக் வைத்திருந்தது. தெரியவந்தது. இதனால் இந்த கொலையை சேவாக் செய்திருக்கலாம் என்று கோணத்தில் தலைமறைவாக இருந்த சேவாக்கைபிடித்து போலீசார் விசாரணை செய்தனர். காதல் எதிர்ப்பால் தாய் திட்டியதால் கொலை செய்து வீட்டுக்குள்ளே புதைத்த அந்த அதிர்ச்சி தகவலை சேவாக் வாக்குமூலமாக கொடுத்துள்ளார்.

 Shocking confession in police investigation;thittakudi incident

Advertisment

சேவாக் பெண் ஒருவரைகாதலித்து வந்துள்ளார். கோவையில் தங்கியுள்ளஅப்பெண்ணைஅடிக்கடி இவர் சென்று பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சேவாக்கின் தாய் கஸ்தூரி இந்த காதலை எதிர்த்துள்ளார். மேலும் மகனை கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சேவாக், தாய் கஸ்தூரியை வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் தாயின் உடலை குடிசை வீட்டுக்குள்ளேயே வைத்து புதைத்து மேலே மண்போட்டு பூசியுள்ளார். அதன் பிறகு தாய்மாமாவின் வீட்டிற்கு சென்று தலைமறைவானது விசாரணையில் தெரியவந்துள்ளது.

police incident mother thittakudi Cuddalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe