Advertisment

லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

Shocking CCTV footage

Advertisment

லாரி மோதி இளைஞர் ஒருவர் உயிரிழக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் முதுநகர் அடுத்துள்ள சின்ன பிள்ளையார்மேடு பகுதியைச் சேர்ந்தவர் இளவரசன். வெல்டிங் வேலை செய்து வரும் இளவரசன் நேற்று இரவு கடலூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். கடலூர் முதுநகர் காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக இளவரசன் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இளவரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்தபுகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிபதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

police Cuddalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe