Advertisment

“அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது” - வைகோ இரங்கல்!

 “Shocking and painful” - Vaiko's condolences!

Advertisment

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நட்சத்திரமாக வலம் வந்தவர் நடிகர் ராஜேஷ், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் ராஜேஷ் ஒரு சினிமா நடிகராக மட்டுமல்லாமல், டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர், ஜோதிடம் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக விளங்கினார். கடைசியாக விஜய் சேதுபதி - கத்ரீனா கைஃப் நடித்த ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படமே இவர் நடித்த கடைசிப் படமாகும். இந்த சூழலில், 76 வயதான நடிகர் ராஜேஷுக்கு இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதையறிந்த அவரது உறவினர்கள் நடிகர் ராஜேஷை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு காலமானார்.

இச்செய்தி திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அனைவரும் ராஜேஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் ராஜேஷ் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கலை உலகில் சிறந்த குணச்சித்திர நடிகரும், எழுத்தாளருமான சகோதரர் ராஜேஷ் மறைந்த செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. பழகுவதற்கு இனிய பண்பாளரான ராஜேஷ் அவர்களின் மறைவால் துயர்படும் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினருக்கும், கலை உலக நண்பர்களுக்கும் மதிமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். மேலும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை நடிகர் ராஜேஷ் நக்கீரன் டிவி சேனலுக்காக பிரத்தியேகமாக எடுத்த பேட்டி ஆறு பாகமாக வெளியிடப்பட்டு பரவலான வாசகர்களைச் சென்று சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/1XurJ_5YnPU.jpg?itok=otCo0aaa","video_url":" Video (Responsive, autoplaying)."]}

rajesh vaiko
இதையும் படியுங்கள்
Subscribe