Advertisment

நிலத்தை அபரிக்க எய்ட்ஸ் வரவைத்தார்களா ? – அதிர்ச்சி குற்றச்சாட்டு! தீவிரம் காட்டுவார்களா அதிகாரிகள்!

திருவண்ணாமலை மாவட்டம், நாயுடுமங்கலத்தை அடுத்த ஈசன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் வெங்கடேசபெருமாள். 18 வயதாகும் இந்த இளைஞன் சரியாக பேசவராது, அவனது செய்கை மூளை வளர்ச்சி குன்றியதை போல் இருக்குமாம். பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள இந்த இளைஞனுக்கு சமீபத்தில் கிராமத்திலேயே ஒருவரிடம் ஊசி போட்டுள்ளனர். ஊசிப்போட்டயிடம் வீங்கி, கட்டியாகியுள்ளது.

Advertisment

shocking accusation! The authorities will show intensity

அந்த கட்டியை அகற்ற வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அங்கு ரத்த பரிசோதனை செய்துள்ளனர். ரத்தத்தில் எச்.ஐ.வி பாதிப்பு இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதுப்பற்றி வெங்கடேசபெருமாளின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியான வெங்கடேசபெருமாளின் பெற்றோர் இது தொடர்பாக ஜீன் 11ந்தேதி மதியம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து என் மகனுக்கு எய்ட்ஸ் ரத்தம் கலந்த ஊசிப்போட்டு எய்ட்ஸ் வரவைத்துள்ளார்கள் என்கிற பகீர் குற்றச்சாட்டை கூறினர்.

இது தொடர்பாக நாம் அவரிடம் பேசியபோது, எனக்கும் எங்களது உறவினர்களுக்கும் இடையே தகராறு இருந்து வருகிறது. எனக்கு சொந்தமாக 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. இதனை விலைக்கு தாங்கள் என எங்கள் உறவினர் சார்பாக எங்கள் ஊரை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் செல்வகுமார் வந்து விலைக்கு கேட்டார். நான் தரமுடியாது எனச்சொல்லிவிட்டேன்.

இதில் கோபமான எங்களது உறவினர்களும், செல்வகுமாரும் சேர்ந்து எனது மகனுக்கு எய்ட்ஸ் நோய் கிருமியுள்ள ஊசியை போட்டுவிட்டார்கள். இதை நான் ஏன் உறுதியாக கூறுகிறேன் என்றால், என் மகனுக்கு எய்ட்ஸ் என உறுதியானதும், எனக்கும், என் மனைவிக்கும் பரிசோதனை செய்தார்கள். எங்களுக்கு அந்த நோய் கிடையாது.

Advertisment

shocking accusation! The authorities will show intensity

எங்கள் மகனுக்கு அடிக்கடி செல்வகுமாரிடம் தான் ஊசிப்போடுவோம், அவன் டிரைவர் வேலைக்கு செல்வதற்கு முன்பு ஊர், ஊராக சென்று ஊசி போடும் வேலை தான் செய்து வந்தான். எங்கள் மகனுக்கு அவனை தவிர வேறு யாரிடமும் நாங்கள் ஊசிப்போட்டதில்லை. அதனால் தான் உறுதியாக கூறுகிறோம் என்றார்.

இதுதொடர்பாக எஸ்.பி அலுவலகத்திலும் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர் போலிஸார். சுகாதாரத்துறையோ இது தொடர்பாக இதில் தீவிரமாக கவனம் செலுத்தாமல் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

thiruvannamalai AIDS
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe