Skip to main content

நாம மிஸ் பண்ணியதை மாவட்ட செயலாளர் செஞ்சுட்டாரே! - அதிர்ச்சியடைந்த திருச்சி அமைச்சர்கள்! 

Published on 21/07/2018 | Edited on 27/08/2018

 

சட்டசபையில் மானிய கோரிக்கைக்கு செல்லும் அமைச்சர்கள் தங்களுடைய ஆதரவாளர்களை உடன் அழைத்து செல்வதும் அவர்களுக்கு பணம் பார்ட்டி, ஜாலி என திக்குமுக்காட வைத்துவிடுவார்கள். இந்த மாதிரியான மகிழ்ச்சியான நேரத்திற்கு கட்சிகாரர்கள் எல்லோரும் ஆர்வத்தோடு காத்திருப்பார்கள். 

 

 

திருச்சி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கடந்த மானிய கோரிக்கைக்கு மா.செ.வாக இருந்தால் எல்லாருக்கும் 10,000, பிரியாணி எல்லாம் கொடுத்து அசத்தினார். இந்த மானியக்கோரிக்கையில் மா.செ. பதவி பறிபோனதாலும், புதிதாக எம்.பி.குமார் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டதால் முன்பு மாவட்ட முழுவதும் இருந்த அரசியல் செய்த அமைச்சர் வெல்லமண்டி தற்போது கிழக்கு தொகுதிக்குள்ளே தன்னை சுருக்கிக்கொண்டார். 

 

 

இந்த முறை மானியக்கோரிக்கையில் வெல்லமண்டி நடராஜன் சென்னையில் இருந்து கொண்டே தன் ஆதரவாளர்களை பஸ் பிடித்து அழைத்து வரும் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் மானிய கோரிக்கைக்கு முந்தின நாள் திருச்சி மாவட்ட அ.தி.மு.க. பொறுப்பாளர் அமைச்சர் தங்கமணியின் இல்ல திருமண விழாவிற்கு எம்.பி.குமார் தலைமையில் பொறுப்பாளர் எல்லோரும் சென்று விட அதிர்ச்சியடைந்த அமைச்சர் எல்லாரும் போயிட்டாங்களே என்று கடைசி நேரத்தில் தன் மகன் ஜவஹரை வைத்து ஒரு குரூப் அழைத்து சென்று ஏதோ கடைமைக்கு செய்வது போல் திருப்தி அடைந்து கொண்டார். 

 

 

இதே போல அமைச்சர் வளர்மதியும் மானிய கோரிக்கைக்கு தனக்கென்று பெரிய ஆதரவாளர்கள் யாரையும் வைத்து கொள்வது இல்லை. எல்லாம் அவரது கணவர் மற்றும் மகன்களோடு எல்லா வரவு செலவுகளை வைத்து கொள்கின்றனர். இதனால் இவருக்கு கட்சியில் எந்த ஆதரவாளர்களும் இல்லாதால் எப்போதும் உடன் இருக்கும் அந்த 4 பேரையும் கூடவே வைத்திருந்தார் கூட்டம் காண்பிப்பதற்கு. அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் ஆதரவாளர்களையும் அழைத்து சென்று. ஜெ. சமாதிக்கு எல்லாம் அழைத்து சென்று யாருக்கும் எந்த செலவும் பண்ணாமல் சென்னையை சுத்தி காண்பிச்சு வழி அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில் கட்சிகாரர்கள் எல்லோரும் அமைச்சர்களின் இந்த கண்டுகொள்ளாத போக்கினால் அதிருப்தி அடைந்தனர். திருச்சி மா.செ.வும், எம்.பியுமான குமார் தன்னுடைய பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு திருச்சியில் உள்ள கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 25 பேரை தேர்வு செய்து டெல்லிக்கு திருச்சியிலிருந்து விமான மூலம் 5 நாள் சுற்றுப்பயணமாக அழைத்து சென்று இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். கடந்த 17ம் தேதியிலிருந்து 22ம் தேதி வரை அங்கேயே தங்கியிருந்து நாடாளுமன்றம், தாஜ்மாஹால், செங்கோட்டை, சிம்லா, ஆகிய இடங்களுக்கு அழைத்து சென்று நிர்வாகிகளை மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க வைத்துள்ளார். 

இதை அறிந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜான், நாம செய்ய மிஸ் பண்ணியதை மா.செ. செஞ்சுட்டாரே என அதிர்ச்சியடைந்தார். உடனே தன்னுடைய மகன் ஜவஹரை வைத்து புத்தூரில் உள்ள அமைச்சர் அலுவலகத்திற்கு திருச்சி மாநகரில் உள்ள வட்ட செயலாளர்கள் எல்லோரையும் அழைத்து பரிசு பை கொடுத்து இது முற்கட்ட தான் அடுத்த வாரம் குற்றாலத்திற்கு அழைச்சுட்டு போய் கறி மீன் எடுத்து ஜாலியா இருக்கலான்னு அப்பா சொல்லியிருக்கார் என்று சமாளித்திருக்கிறார். நமக்கு வந்த வரைக்கு இலாபம் தான். அடுத்த வாரம் குற்றாலம் டூர் என ஜாலியாக கலைந்து சென்றிருக்கிறார்கள்.

யார் கண்ணு பட்டதோ தெரியல அடுத்த நாளே அமைச்சர் இப்போதைக்கு குற்றாலம் ஜாலி டூர் தற்போதுதைக்கு தள்ளிவைக்கலான்னும் யோசனை சொல்லியிருக்கார். இதனால் ஆதரவாளர்கள் டீம் அப்செட்டில் இருக்கிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

“கேட்ட சீட்டு கிடைக்கவில்லை என்றாலும் தி.மு.க கூட்டணியிலிருந்து விலகமாட்டோம்” - காதர் மொய்தீன்!

Published on 21/11/2020 | Edited on 21/11/2020

 

Indian Union Muslim League Kader Mohideen  press meet

 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாவட்ட பொதுக்குழு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 9 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் கூறியதாவது; சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.விடம் திருச்சி கிழக்குத் தொகுதியைக் கேட்பது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைமை பொதுக் குழுவை கேட்டுக் கொண்டுள்ளது.

 

இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் தி.மு.க.வுடன் கொள்கை அடிப்படையில் கூட்டணி வைத்திருக்கிறது. சீட்டுக்காகக் கூட்டணி இல்லை. கேட்ட சீட்டு கிடைக்கவில்லை என்றால் கூட்டணியிலிருந்து விலகமாட்டோம். அவர்களும், விடவும் மாட்டார்கள். 

 

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது மற்ற மாணவர்களின் சம வாய்ப்பைப் பறிப்பது போன்றது. எனவே அனைத்து மாணவர்களுக்கும் உரிய வாய்ப்பு வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

மருத்துவப் படிப்பில் சேர்ந்து பணம் கட்ட முடியாமல் இருக்கும் மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து உதவ வேண்டும். உதயநிதி தேர்தல் பிரச்சாரத்தை தற்போது தொடங்கி இருப்பது வரவேற்கத்தக்கது. 


உதயநிதியின் தேர்தல் பிரச்சாரத்தை தடுப்பது தி.மு.க.விற்கு, மக்களிடையே ஆதரவை அதிகரிக்கும். பீகாரில் காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்ததற்கு ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தான் காரணம் எனக் கூறுவது ஏற்புடையதல்ல. உள்துறை அமைச்சர் தமிழக வருகையால் எதிர்க்கட்சிகளுக்கு எந்தப் பயமுமில்லை எனத் தெரிவித்தார்.

 

 

 

Next Story

காவிரி ஆற்றில் மூழ்கிய இளைஞர் சடலமாக மீட்பு... சிறுவர்களைத் தேடும் மீட்புப் படையினர்!

Published on 18/11/2020 | Edited on 18/11/2020

 

youngster and kids fellen on cuvery musuri river


திருச்சி முசிறி காவிரி ஆற்றில் குளித்தபோது பலியான இருவரை, சடலமாக மீட்டுள்ள மீட்புப் படையினர், மாயமான இரு சிறுவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


திருச்சி மாவட்டம் முசிறி அந்தரபட்டி பகுதியில் வசிப்பவர் ஜெயலக்ஷ்மி. இவரது உறவினர்கள் கோவை மற்றும் கரூர் பகுதியில் இருந்து ஜெயலக்ஷ்மி இல்லத்திற்கு நேற்று வந்துள்ளனர். பின்னர், ஜெயலக்ஷ்மியின் உறவினர்களான கோவை தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியர் சரவணகுமார் (31), நித்திஷ்குமார் (15), சிறுவர்கள் மிதிலேஷ்(8), ரத்திஷ் (12) ஆகியோர் முசிறி பரிசல் துறை ரோட்டில் உள்ள காவிரி ஆற்றுக்குக் குளிக்கச் சென்றுள்ளனர்.  


ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக புதை மணலில் சிக்கிய பேராசிரியர் சரவணகுமார், நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார். அப்போது சிறுவர்கள் ரதீஷ், மிதிலேஷ் ஆகியோரும்  மாயமாகினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற முசிறி தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள், காவிரி ஆற்று தண்ணீரில் இறங்கித் தேடினர். அப்போது சரவணகுமார் உடலை சடலமாக மீட்டனர். 

 

தொடர்ந்து மிதிலேஷ், ரதிஷ் ஆகியோரை தேடியபோது எதிர்பாராதவிதமாக முசிறி கருமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பார்த்திபன் (12) என்ற சிறுவனின் சடலம் கிடைத்தது.


தேடிய சிறுவர்களில் சடலம் கிடைக்காமல் மேலும் ஒரு சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடையச் செய்தது. மேலும், சிறுவர்கள் இருவரையும் மீட்புப்படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். முசிறியில் தற்போது விட்டுவிட்டு மழை பெய்வதால், வீரர்கள் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் சிறுவர்களைத் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.