Shocked as a person thought buried comes back

Advertisment

திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம் அருகே கடந்த 17ம் தேதி 60 வயது மதிக்கத்தக்க முதியவர் கீழே விழுந்து தலையில் அடிபட்டு இருந்தார். இதன் பின் அங்கு இருந்தோர் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவரை யார் என கண்டுபிடிப்பதற்கு இவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இதன் பின் கீழே விழுந்து காயம்பட்ட முதியவர் திண்டுக்கல் பெரியகோட்டை அருகே உள்ள பாறைபட்டியைச் சேர்ந்த பழனிசாமி என்று அவரதுகுடும்பத்தினர் காவல் நிலையத்தில் கூறினர்.

இதன் பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நபர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின் அவரது குடும்பத்தினர் இறந்தவர் பழனிசாமிதான் என உறுதி அளித்த பின் பழனிசாமியின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisment

இதனைத்தொடர்ந்து இறந்தவரை குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். நேற்று திடீரென இறந்ததாக நினைத்த பழனிசாமி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனை அடுத்து இறந்தவர் யார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.