காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க தினமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வருவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம். இத்தனை லட்சம் பக்தர்களின் நோக்கம் கடவுளின் அருள் கிடைக்க வேண்டும், அதன் வழியாக நோய் நொடியில்லாமல் வாழவேண்டும், செல்வம் பெருக வேண்டும் என்பதேவாகும்.

Advertisment

shocked family after adivarathar dharshanam

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஆர்.குண்ணத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முகருகதாஸ். 48 வயதாகும் இவர் போளுரில் ரெடிமேட் துணிக்கடை வைத்துள்ளார்.இவர் கடந்த 26ந்தேதி தனது குடும்பத்துடன் காஞ்சிபுரம் சென்று அத்திவரதர் தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்கு இரவு திரும்பிவந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 50 சவரன் தங்க நகைகள் மற்றும் 75,000 ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளைப்போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

Advertisment

இதுப்பற்றி உடனடியாக போளூர் காவல்நிலையத்துக்கு தகவல் கூற அவர்கள் வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். பின்னர் புகார் வாங்கிய போலிஸார், இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

shocked family after adivarathar dharshanam

அத்திவரதரை சந்திக்க அதிகளவில் பக்தர்கள் வருவதால் கோயிலில் கூட்டம் அதிகமாக இருக்கும் தங்க நகைகளுக்கு பாதுகாப்பு இருக்காது என வீட்டிலேயே பாதிக்கும் மேற்பட்ட நகைகளை கழட்டி பீரோவில் வைத்துவிட்டு சென்றுள்ளனர். இதனை தான் கொள்ளையடித்து சென்றுள்ளது திருட்டு கும்பல்.

Advertisment