ADVERTISEMENT

வலி நிவாரணியை போதையாக்கிய மாணவர்கள்... கோவையில் திடுக்!

05:15 PM Sep 19, 2022 | kalaimohan

ADVERTISEMENT


ADVERTISEMENT

கோவையில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக மாணவர்கள் பயன்படுத்திய அதிர்ச்சி தகவல் வெளியான நிலையில், இது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் உள்ள கல்வி நிறுவனங்களில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கி படித்து வரும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு கோவை இரத்தினகிரியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது மூன்று மாணவர்கள் போலீசாரை பார்த்தவுடன் ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் மூவரையும் துரத்திப் பிடித்து அவர்களது உடைமைகளை ஆய்வு செய்தனர். அதில் பிரசவ வலிக்கு பயன்படுத்தும் சில வலி நிவாரணி மாத்திரைகள், ஊசி சிரஞ்சுகள் இருப்பதைக் கண்ட போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து சிரஞ்சி மூலம் கையில் ஏற்றிக்கொண்டது தெரியவந்தது. மேலும் சக மாணவர்களுக்கு இதே முறையைப் பயன்படுத்தி போதையை கொடுத்து பணம் பெற்றுவந்தது தெரியவந்தது. சிங்காநல்லூரில் மருந்து கடை நடத்தி வரும் கரிகாலன் என்பவரிடம் இருந்து மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வலி நிவாரணி மருந்துகளை பெற்று போதைக்காக சக மாணவர்களுக்கு விற்றது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக மருந்தக உரிமையாளர் கரிகாலன் மேலும் மூன்று மாணவர்கள் என மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 1,512 மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் மூவரில் ஒருவர் சிறார் என்பதால் அவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், மீதம் உள்ள இரண்டு பேரை கோவை மத்திய சிறையிலும் போலீசார் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT