/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/n2043.jpg)
கோவையில் வலி நிவாரணிமாத்திரைகளைபோதைக்காக மாணவர்கள் பயன்படுத்திய அதிர்ச்சி தகவல் வெளியான நிலையில், இதுதொடர்பாககல்லூரி மாணவர்கள் மூவரைபோலீசார்கைது செய்துள்ளனர்.
கோவையில் உள்ள கல்வி நிறுவனங்களில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள்தங்கிபடித்து வரும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு கோவைஇரத்தினகிரியில்போலீசார்ரோந்து பணியில்ஈடுபட்டுகொண்டிருந்தனர். அப்பொழுது மூன்று மாணவர்கள் போலீசாரை பார்த்தவுடன் ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகமடைந்தபோலீசார்மூவரையும் துரத்திப் பிடித்து அவர்களது உடைமைகளை ஆய்வு செய்தனர். அதில் பிரசவவலிக்குபயன்படுத்தும் சில வலி நிவாரணி மாத்திரைகள், ஊசிசிரஞ்சுகள்இருப்பதைக் கண்ட போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் போதைக்காக வலி நிவாரணிமாத்திரைகளைதண்ணீரில் கரைத்துசிரஞ்சிமூலம் கையில் ஏற்றிக்கொண்டது தெரியவந்தது. மேலும் சக மாணவர்களுக்கு இதே முறையைப் பயன்படுத்திபோதையைகொடுத்து பணம் பெற்றுவந்தது தெரியவந்தது. சிங்காநல்லூரில் மருந்து கடை நடத்தி வரும் கரிகாலன் என்பவரிடம் இருந்து மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வலி நிவாரணிமருந்துகளைபெற்று போதைக்காக சக மாணவர்களுக்கு விற்றது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக மருந்தக உரிமையாளர் கரிகாலன் மேலும் மூன்று மாணவர்கள் என மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 1,512 மாத்திரைகளைபோலீசார்பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் மூவரில் ஒருவர் சிறார் என்பதால்அவனைசிறுவர்சீர்திருத்தபள்ளியிலும், மீதம் உள்ள இரண்டுபேரைகோவைமத்தியசிறையிலும்போலீசார்அடைத்துள்ளனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)