Skip to main content

'பூச்சி மருந்து அடித்து கொலை' - திமுக பெண் கவுன்சிலர் கொலையில் திடுக்

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

Shocked at the case of a DMK woman councilor who was beaten to death by 'hit medicine'

 

கரூரில் திமுக பெண் கவுன்சிலர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் கொலைக்கான பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

கரூர் மாவட்டம் சென்னாசமுத்திரம் பேரூராட்சி பகுதியின் ஏழாவது வார்டு திமுக கவுன்சிலர் ரூபா (வயது 48). கடந்த ஐந்தாண்டுகளாக கரூரில் இருக்கக்கூடிய பல்வேறு வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல வீட்டில் இருந்து கரூருக்கு வீட்டு வேலைக்கு செல்வதாக சொல்லிவிட்டு பேருந்தில் சென்றுள்ளார்.

 

மாலை 5 மணி ஆகியும் வீடு திரும்பாததால் ரூபாவின் மகன் கோகுல் பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். அவர் வீட்டு வேலை செய்த வீடுகளில் எல்லாம் விசாரித்துள்ளார். ரூபா காலை முதலே இங்கே வரவில்லை என தெரிவித்துள்ளனர். உடனடியாக அம்மாவின் செல்போனுக்கு கால் செய்த பொழுது செல்போன் அணைக்கப்பட்டு இருந்தது. உடனடியாக கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் கரூர் போலீசாரோ நீங்கள் இருப்பது ஈரோடு பகுதியைச் சேர்ந்தது என்பதால் கொடுமுடி காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தினர்.

 

அதனைத் தொடர்ந்து கொடுமுடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் கரூர் மாவட்டம் பாலமலை அருகே உள்ள குமாரசாமி என்பவருக்கு சொந்தமான காட்டுப் பகுதியில் பெண்ணுடைய சடலம் ஒன்று அரை நிர்வாண கோலத்தில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அது காணாமல் போன ரூபாவின் உடல் என உறுதிப்படுத்தப்பட்டது. தலையில் பலத்த காயத்துடன் உயிரிழந்து கிடந்த ரூபாவின் உடலை மீட்டு போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திமுக பெண் கவுன்சிலர் அரை நிர்வாண கோலத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

nn

 

வழக்கு பதிவு செய்த போலீசார் இது தொடர்பாக நான்கு தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கடைசியாக செல்போனில் நித்யா என்ற பெண்ணிடம் ரூபா பேசியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து நித்யாவை கைது செய்து விசாரித்ததில் அந்த திடுக்கிடும் தகவல் வெளியே வந்தது. இருவரும் ஒரே வீட்டில் வீட்டு வேலை செய்து வந்த நிலையில் இருவரும் தோழிகள் ஆகியுள்ளனர். சம்பவத்தன்று நித்யாவும் வேலைக்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது. திமுக பெண் கவுன்சிலர் அணிந்திருந்த நகைகளை பறிக்க திட்டமிட்ட நித்யா, சம்பவத்தன்று ரூபாவை செல்போனில் தொடர்பு கொண்டு  தங்கள் ஊர் பக்கம் ஒரு வீட்டில் வேலை இருப்பதாக கூறி அழைத்துள்ளார். அதை நம்பி ரூபா பேருந்தில் புறப்பட்ட ரூபா புன்னம் சத்திரம் கிராமத்தில் இறங்கினார்.

 

nn

 

பின்னர் அங்கு தன் கணவர் கதிர்வேலுவுடன் இருசக்கர வாகனத்தில் வந்த நித்யா, ரூபாவை ஏற்றிக் கொண்டு காட்டுப்பகுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராத நேரத்தில் ரூபாவின் முகத்தில் பூச்சி மருந்தை அடித்துள்ளார். நிலை தடுமாறிய ரூபா கீழே விழுந்ததும் அவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலி ,கம்மல், மாட்டல், கொலுசு ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்ப முயன்றுள்ளனர். இருந்தாலும் கதிர்வேலை ஓட விடாமல் ரூபா மடக்கிப் பிடித்துள்ளார். தொடர்ந்து நித்யா ரூபாவின் மேலாடையை பிடித்து இழுத்தபோது அது கையோடு வந்துள்ளது. ரூபாவை தாக்கி சாய்த்து தலையில் கல்லை போட்டு நசுக்கி கொலை செய்தனர். பின்னர் திருடப்பட்ட நகைகளை கரூரில் உள்ள நகை அடகு கடையில் விற்க முயன்ற பொழுது கதிர்வேலையும் நித்யாவையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்