Shocked by her brother lost her younger sister fainted and passed away

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு, கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன்(90). சிலம்பாட்ட வீரரான இவருக்கு 10 பிள்ளைகள் உள்ள நிலையில் சீனிவாசன் கடந்த ஒரு மாத காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த வந்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாகச் சீனிவாசன் உயிரிழந்துள்ளார். அவரது இறப்புச் செய்தியைக் கேட்ட அடுத்த நொடியே சீனிவாசனின் தங்கை தவமணியும் மயங்கி விழுந்து உயிரிழந்தார். சிறுவயதில் இருந்தே இருவரும் பாசமாக இருந்து வந்த நிலையில் தவமணி சீனிவாசன் வீட்டிற்கு அருகேதான் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் அண்ணன் உயிரிழந்த செய்தியைக் கேட்டு அடுத்த நொடியே தங்கையும் உயிரிழந்திருப்பது உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisment

இதையடுத்து, அண்ணன் - தங்கை இருவரின் உடலும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டு, அவர்களது, பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு இருவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.