shock in the morning; 8 Tamil Nadu fishermen arrested

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில் இன்று காலை அதிர்ச்சி தரும் விதமாக மீண்டும் தமிழகத்தைச் சேர்ந்த எட்டு மீனவர்கள் படகுடன் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

வடக்கு வங்கக் கடலில் ஏற்பட்ட சூறைக்காற்று காரணமாக கடந்த ஒரு வாரமாகவே மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்தனர். தொடர்ந்து நேற்று காலை ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 430-க்கு மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் அனுமதி சீட்டு பெற்று ராமேஸ்வரம் மீன் பிடித்துறை முகத்திலிருந்து தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

Advertisment

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒரு படகையும் எட்டு மீனவர்களையும் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எட்டு மீனவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இந்த விசாரணைக்குப் பின்னர் மீனவர்கள் அனைவரும் மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.