shock awaits those who returned from the temple

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள ஈஞ்சம்பள்ளி கிராமம் பொன்னம்பாளையம் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பழனி முருகன் கோவிலுக்கு கடந்த 6-ந் தேதி அதிகாலை சென்றனர். சாமி தரிசனம் முடித்துவிட்டு நேற்று முன்தினம்(9.4.2024) வீடு திரும்பினர். அப்போது பொன்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த குமார் (64) என்பவரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 15 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது. இதேபோல் அதே பகுதியில் மேலும் 3 வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்துள்ளது தெரிய வந்தது.

இது குறித்து குமார் மலையம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரின் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கதிரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்துச் சென்றனர் கிராம மக்கள் பழனி கோவிலுக்கு சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

இது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.