Skip to main content

ட்ரோன் கேமரா ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! 

Published on 26/09/2022 | Edited on 26/09/2022

 

A shock awaits the person who ordered the drone camera!

 

ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் இணையதளத்தில் 80,000 ரூபாய் கொடுத்து ட்ரோன் கேமரா ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் 100 ரூபாய் பொம்மை கார் வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். 

 

திருவள்ளூர் மாவட்டம், சிவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த மொய்தீன் அவரது நண்பர் சுரேஷ் என்பவருக்காக ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் ட்ரோன் கேமரா ஆர்டர் செய்துள்ளார். இதற்காக கிரெடிட் கார்டு மூலமாக 79,064 ரூபாயைச் செலுத்தியதாகத் தெரிவித்துள்ளார். 

 

கேமரா பார்சல் இன்று (26/09/2022) வந்த நிலையில், அது தக்கையாக இருந்ததால் சந்தேகமடைந்த இருவரும் பார்சலைப் பிரிக்கும் போது வீடியோ எடுத்துள்ளனர். அப்போது பார்சலில் ட்ரோன் கேமராவுக்கு பதில் பொம்மை கார் இருந்துள்ளது. 

 

இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் டெலிவரி செய்தவரைத் தொடர்புக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர் செல்போனை எடுக்காத நிலையில், ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் புகார் அளித்திருப்பதாக தெரிவித்தனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோன்கள் கண்காணிப்பில் வெள்ளியங்கிரி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Drones are the key to surveillance

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் காட்டுத்தீ ஏற்படும் சூழ்நிலைகளும் உருவாகியுள்ளது. பக்தர்கள் மலையேறுவதற்கான பாதையைத் தவிர்த்து வேறு பாதையைப் பயன்படுத்திவிடாமல் இருக்க கண்காணிக்கப்படுவதாற்காக ட்ரோன்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாரை சாரையாக மலையேற தொடங்கி வரும் நிலையில் சுழற்சி முறையில் தற்போது ட்ரோன்கள் மூலம் பக்தர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Next Story

தமிழக காவல்துறையில் டிரோன் போலீஸ் பிரிவு தொடக்கம்

Published on 29/06/2023 | Edited on 29/06/2023

 

greater chennai police drone section started

 

தமிழக காவல்துறையில் டிரோன் போலீஸ் பிரிவு என்ற புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் குற்றங்களைக் குறைக்கவும், தமிழகத்தில் சட்ட ஒழுங்குகளைக் காக்கவும் தமிழக அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக காவல்துறை சார்பில், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் டிரோன் போலீஸ் பிரிவு என்ற புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரிவைத் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாகத் தமிழக காவல் பிரிவில் டிரோன் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

 

செயற்கை நுண்ணுணர்வு திறன் கொண்ட டிரோன்கள் காவல் காட்டுப்பாட்டு அறையின் தொலைத்தொடர்பு பிரிவு உடன் இணைக்கப்பட்டுக் கண்காணிக்கப்படும். டிரோன்களை சுமார் 5 கி.மீ. வரையிலும் கட்டுப்பாட்டு அறையில் இருந்தே இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 3.6 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இப்பிரிவின் மூலம் போக்குவரத்து நெரிசலைக் கண்டறிதல், ஆட்கள் நுழைய முடியாத இடங்கள், மக்கள் நெரிசலான பகுதிகள், பண்டிகை காலங்களில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்கவும் இந்த டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன.