Shivshankar Baba jailed till 16th

Advertisment

முன்னாள் மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா மீதான மூன்றாவது வழக்கை போக்சோ பிரிவுக்கு மாற்றி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுவரை 18 முன்னாள் மாணவிகள் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன. பள்ளியில் உள்ள சொகுசு அறைக்கு நேராக அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில், ஆபாசமாகப் பேச பயன்படுத்திய பள்ளியின் மெயில் ஐடி, பென் ட்ரைவ், சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

தற்போது சிவசங்கர் பாபா புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த தாளாளர் சிவசங்கர் பாபா மீது சி.பி.சி.ஐ.டி காவல்துறை கைது செய்து வழக்குப் பதிந்தனர். இவர் மீது மூன்று போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று(2.08.2021) மூன்றாவது போக்சோ வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவை 16ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.