Advertisment

குமரியில் தொடங்கியது சிவராத்திரி சிவாலய ஒட்டம்!

sivalaya-ottam

Advertisment

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவராத்திரி சிவாலய பக்தர்கள் ஒட்டம் நேற்று மாலை தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த 12 சிவன் கோவில்கள் விளவங்வோடு மற்றும் கல்குளம் தாலுகாவில் அமைந்துள்ளன. இந்த கோவில்களின் வரலாற்று அடிப்படையை கொண்டு சைவ வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் சிவாலய ஒட்டம் ஆண்டுதோறும் நடக்கிறது. இந்த கோவில்களை சிவராத்திரி அன்று பக்தர்கள் கால் நடையாய் நடந்து ஒடியே தரிசிக்கின்றனர்.

இதற்காக பக்தர்கள் மாலை அணிந்து 6 நாட்கள் விரதமிருந்து நேற்று மாலை சிவாலயத்தின் முதல் கோவிலான திருமலை மகாதேவர் கோவிலிருந்து மங்காடு ஆற்றில் குளித்து விட்டு காவி வேட்டி, காவி துண்டு அணிந்து கொண்டு கோவிந்தா…கோபாலா என்ற கோஷத்தை முழங்கிய படியே ஒட்டத்தை தொடங்கினார்கள்.

Advertisment

தொடர்ந்து இந்த பக்தர்கள் திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு வீர பத்திரர் கோவில், திருநந்திகரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவர் கோவில், பந்நிபாகம் சந்திரமவுலீஸ்வரர் கோவில், கல்குளம் நீலகண்டசுவாமி கோவில், மேலாங்கோடு காலகாலர் கோவில், திருவிடைக்கோடு சடையப்பநாதர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், திருபன்றிக்கோடு மகாதேவர் கோவில், நட்டாலம் சந்கர நாராயனர் கோவில் ஆகிய 12 கோவில்களுக்கு 110 கி.மீ செல்கின்றனர். இதற்காக இரவு பகல் கண்விழித்து நடக்கின்றனர்.

பின்னர் சிவராத்திரியான இன்று இரவு நட்டாலம் சங்கரா நாராயனர் கோவில் வந்தடைந்து சிவாலய ஒட்டத்தை முடிக்கும் பக்தர்கள் நாளை அதிகாலை 6 மணி வரை தூங்காமல் விரதத்தை கடைபிடிக்கிறார்கள்.

இந்த சிவராத்திரி சிவாலய ஒட்டத்தையொட்டி 12 சிவன் கோவில்களிலும் விழா கோலம் பூண்டியிருக்கும். இதில் குமரி மாவட்ட பக்தர்கள் மட்டுமல்லாமல் கேரளாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வயது வித்தியாசம் இல்லாமல் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஆயிரக்கணக்கானேர் கலந்து கொள்கின்றனர்.

இதையெட்டி இந்த ஆண்டு முதல் இன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளுர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

- மணிகண்டன்

shivaraatiri
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe