Advertisment

'2 ரூபாய்க்கு சட்டை'- அலப்பறை கொடுத்த 'ஆம்பள சொக்கா' கடை

'Shirt for 2 rupees' - Ambala Chokka shop that gave Alapparai

பெரும்பாலும் புதிதாகப் பிரியாணி கடைகள் திறக்கும் பொழுது 10 ரூபாய்க்கு ஒரு பிரியாணி அல்லது ஒரு பிரியாணி வாங்கினால் ஒன்று இலவசம் போன்ற நூதன விளம்பரங்களைப் பார்த்திருப்போம். கடை திறக்கும் நாளிலேயே மக்கள் கூட்டம் கடையில் அலைமோத வேண்டும் எனக் கடையின் உரிமையாளர்கள் இந்த நூதன முறைகளைக் கடைப்பிடிக்கின்றனர்.

Advertisment

தற்பொழுதெல்லாம் பிரியாணி கடைகளைத் தாண்டி அனைத்து வர்த்தக நிலையங்களிலும் இதுபோன்ற அதிரடி ஆஃபர் முறைகள் கொண்டு வரப்படுகின்றன. அப்படி ஒரு ஆஃபரைத்தான் கொடுத்துள்ளது துணிக்கடை ஒன்று. சிவகாசியில் புதிதாகத் திறக்கப்பட்ட 'ஆம்பள சொக்கா' என்ற துணிக்கடையில் அறிமுக நாள் சலுகையாக முதலில் வரும் 50 பேருக்கு 2 ரூபாய்க்கு ஒரு சட்டை என்ற ஆஃபர் வெளியிடப்பட்டிருந்தது. அதேபோல குலுக்கல் முறையில் ஸ்மார்ட் டிவி ஒன்று வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடை திறந்த முதல் நாளே கூட்டமும் அள்ளியது. பி.எஸ்.ஆர் சாலையில் இந்த கடை அமைந்துள்ள பகுதி போக்குவரத்து மிகுந்த பகுதியாகும். ஆஃபர் காரணமாக அதிகமான இளைஞர்கள் படை எடுத்ததால்அங்கு சற்றுபோக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போட்டிபோட்டுக்கொண்டுஉள்ளே நுழைந்த இளைஞர்கள் துணிகளை வாங்கி சென்றனர்.

Advertisment
Business offer Sivakasi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe