Advertisment

கப்பல் பழுது பார்க்கும் பணியில் விபத்து; ஒருவர் உயிரிழப்பு

Ship repair accident; One person was lose their live

சென்னை துறைமுகத்தில் கப்பல் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தஊழியர்கேஸ் கட்டர் வெடித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

சென்னை துறைமுக வளாகத்தில் கோஸ்டல் பர்த் பிளேஸ் என்ற இடத்தில் ஆயில் ஏற்றிச் செல்லக்கூடிய கப்பல் ஒன்று ஒடிசா மாநிலத்திலிருந்து கடந்த 31ம் தேதி கொண்டு வரப்பட்டது. ராயல் டெக் என்ற நிறுவனத்தின் மூலம் அந்த கப்பலை பழுது பார்க்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று காலை கேஸ் கட்டர் மூலமாகப் பணியாளர் ஒருவர் கப்பலில் என்ஜின் பகுதியில் போல்ட் ஒன்றை அகற்றிக் கொண்டிருந்தபோது திடீரென கேஸ் பைப்பில் தீப்பொறி சிதறி விபத்து ஏற்பட்டது. இதில் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சகாய தங்கராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காசிமேட்டைச் சேர்ந்த ஜோஸ்வா, தண்டையார்பேட்டையைச்சேர்ந்த ராஜேஷ் ஆகியோர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்த சம்பவம் தொடர்பாகத்துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

accident Chennai police ship
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe