Advertisment

'அமைதியான இடத்திற்குத்தான் என் மகள் சென்றிருக்கிறாள்' - மவுனம் கலைத்த விஜய் ஆண்டனி

'She has gone to a quiet place' - Vijay Antony broke the silence

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் மீரா (வயது 16) சென்னையில் உள்ள தனியார்ப்பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட மீராவின் உடலை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்துள்ளனர். அங்கே அவரது இறப்பு உறுதி செய்யப்பட்டது. கடந்த சில தினங்களாக மீரா மன அழுத்தத்தில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து போலீசார், தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Advertisment

'She has gone to a quiet place' - Vijay Antony broke the silence

இந்நிலையில், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தன்னுடையமகள் உயிரிழப்பு குறித்துமவுனம் கலைத்துள்ளார். இது குறித்து தனதுசமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமாக அவர்வெளியிட்டுள்ள பதிவில், 'அன்புள்ள நெஞ்சங்களே, என் மகள் மீரா மிகவும் அன்பானவள்;தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகை விடச் சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குத்தான் சென்றிருக்கிறாள்;என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள்;அவளுடன் நானும் இறந்துவிட்டேன்;நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன்;அவள் பெயரில் நான் செய்யப் போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்.' என உருக்கமாகத்தெரிவித்துள்ளார்.

Advertisment

mm

விஜய் ஆண்டனியின் இந்தப் பதிவு தற்பொழுது வைரலாகி வருகிறது.

daughter police tamilcinema
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe