பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு அரை மணி நேரத்தில் வீடு தேடி வந்த வேலை

Sharmila, a female driver, found a job in half an hour

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவரது தந்தை மகேஷ்சமையல் எரிவாயு சிலிண்டர் ஆட்டோவை ஓட்டி வந்துள்ளார். தன்னுடைய தந்தை டிரைவர் என்பதால், ஷர்மிளாவுக்கு சிறு வயது முதலே வாகனங்கள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் இருந்துள்ளது. அதன் நீட்சியாக பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பதை தன்னுடைய கனவாகவும் கொண்டுள்ளார்.

அதே சமயம் ஆண்கள் மட்டுமே அதிகம் இருக்கும் கனரக வாகன ஓட்டுநர் பணியில் தனக்கான முத்திரையைப் பதிக்க வேண்டும் என நினைத்த ஷர்மிளாவிற்கு தனது குடும்பத்தில் இருந்தும் சம்மதம் கிடைத்துள்ளது. இதனால் உற்சாகமடைந்த ஷர்மிளா, 2019 ஆம் ஆண்டில் இருந்து ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அதன்பிறகுகனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான முறையான பயிற்சி பெற்று உரிமமும் பெற்றுள்ளார். இதையடுத்து ஓட்டுநர் பயிற்சி முடித்ததும் தனியார் நிறுவனம் அளித்த வாய்ப்பை பயன்படுத்தி பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இதன் மூலம் மக்கள் மத்திலும், சமூக வலைத்தளங்களிலும்கவனம் பெற்றார். அதன் மூலம் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

இந்நிலையில் தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழிஎம்.பி கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதன் ஒரு நிகழ்வாக கோவையில்,முதல் பெண் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளாவை நேரில் சந்தித்துக் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஷர்மிளா ஓட்டும் பேருந்தில் கனிமொழி பயணம் மேற்கொண்டார். பேருந்தில் பயணித்த பெண்களிடமும் உரையாடினார். காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பீளமேடு பகுதி வரை பயணித்த கனிமொழி, ஷர்மிளாவிற்கு கைக் கடிகாரத்தை பரிசளித்து கட்டியணைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

Sharmila, a female driver, found a job in half an hour

இந்த நிலையில் கனிமொழி வருகைக்குப் பின் பெண் ஓட்டுநர்ஷர்மிளாவிற்கும்பெண் நடத்துநருக்கும்இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத்தகவல் வெளியான நிலையில் இன்றுஅவரது பணியை ஷர்மிளாவிட்டதாகத்தகவல் வெளியானது. அதேநேரம் தான் பிரபலமாக வேண்டும் என்றஎண்ணத்தில் ஷர்மிளா செயல்படுவதாக பேருந்து உரிமையாளர் தரப்பு வைத்த குற்றச்சாட்டால்அவரது பணி பறிபோனதுஎன்ற தகவலும் வெளியானது. இந்நிலையில் இதனை அறிந்த கனிமொழி, ஷர்மிளா வேலை இழந்தது குறித்து விசாரித்து அவருக்கு வேறு நிறுவனத்தில் வேலை பெற்றுத் தருவது குறித்து உறுதியளித்தார். இந்நிலையில் அவருக்கு உக்கடம்-போகம்பட்டி வரை செல்லும் தனியார் பேருந்து நிறுவனமானகிருஷ்ணா நிறுவனம் ஓட்டுநர் பணிஅளித்துள்ளது.

kanimozhi kovai
இதையும் படியுங்கள்
Subscribe