காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா தொடங்கி ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

Advertisment

 Share auto driver ignites fire at Kanchippuram festival

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் நடைபெறும் கோவில் அருகே அனுமதி சீட்டு இருந்தும் போலீசார் ஷேர் ஆட்டோவைஅனுமதிக்க மறுத்ததால் நடந்த வாக்குவாதத்தில் ஷேர் ஆட்டோ ஓட்டுநர் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

 Share auto driver ignites fire at Kanchippuram festival

தீக்காயமடைந்த ஷேர் ஆட்டோஓட்டுநர் குமார் தற்போது மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின்பொழுது ஆட்டோ ஓட்டுநர் குமார் தன் மீது பெட்ரோலை ஊற்றிக்கொள்ளும்போதுபோலீசார் யாரும் தடுக்கவில்லை எனவும், அவர் தீக்குளித்து அரைமணி நேரம் கழித்துத்தான் போலீசார் அவரை மீட்டு அவரது ஆட்டோவிலேயே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கோவில் அருகே ஷேர் ஆட்டோக்களை அனுமதிப்பது தொடர்பாக நடந்த வாக்குவாதத்தில் இந்த தீக்குளிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment