Advertisment

புதிய தலைமைச்செயலாளர், புதிய டிஜிபி  நியமனம்

தமிழக அரசின் புதிய தலைமைச்செயலாளராக கே.சண்முகம் நியமனம் செய்யப் பட்டுள்ளார். நிதித்துறை செயலாளராக இருந்த சண்முகத்தை தலைமைச் செயலாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நாளையுடன் ஓய்வு பெறுவதால் சண்முகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

சேலம் மாவட்டத்தை சேர்ந்த சண்முகம், வேளாண் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். 7.6.1985ல் அரசுப்பணியில் சேர்ந்தார். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புதுறை முதன்மை செயலராக பொறுப்பு வகித்துள்ளார்.

t

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு காவல்துறை டிஜிபியாக ஜே.கே.திரிபாதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சீருடைப்பணியாளர் தேர்வாணைய தலைவராக இருந்த திரிபாதி, புதிய டிஜிபியாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. டிஜிபி டி.கே.ராஜேந்திரன் நாளை ஓய்வு பெறுவதால் புதிய டிஜிபியாக திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

1985ம் ஆண்டில் ஐபிஎஸ் பேட்ச் அதிகாரியான திரிபாதி ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாகவும், இரண்டு முறை சென்னை காவல் ஆணையராகவும் இருந்தவர் திரிபாதி. தென்மண்டல ஐஜி, சிபிசிஐடி ஐஜி, பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.

ips ias
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe