/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a530_0.jpg)
நடிகரும் தேமுதிகவின் தலைவருமான மறைந்த விஜயகாந்தின் 71வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தேமுதிகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விஜயகாந்தின் பிறந்தநாளை ஒட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிகவின் தலைமை அலுவலகத்தில் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அவருடைய நினைவிடத்தில் உருவச் சிலையும் அமைக்கப்பட்டுஇன்று திறக்கப்பட்டிருந்தது. இதற்கான நிகழ்ச்சியில் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதேபோல விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனும் கலந்து கொண்டார். இந்நிலையில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்த நிலையில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் திடீரென மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அவர் அங்கிருந்து காரில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)