Advertisment

’சிம்புதேவனை தூக்கிட்டு ஷங்கரே டைரக்ட் பண்ணட்டும்..’- வடிவேலு

இம்சை அரசன் 23ம் புலிகேசி வெற்றிப்படத்திற்கு பின்னர், இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் ஆரம்பிக்கப்பட்டது. இயக்குநர் ஷங்கரே இப்படத்தையும் தயாரிப்பதாகவும், சிம்புதேவன் இயக்குவதாகவும் அறிவிப்புகள் வெளியாகின. வடிவேலு இப்படத்தில் நடிக்க வரவில்லை என்று கடந்த சில வருடங்களாகவே பஞ்சாயத்து நடந்துகொண்டிருப்பதாக தகவல்.

Advertisment

v

இந்நிலையில் இது குறித்து வடிவேலு, ‘’சிம்புதேவன் பெரிய டைரக்டர் கிடையாது. அவனுக்கு படம் வரையத்தெரியும். இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின்போது வரைஞ்சு காட்டுவான். பெரிய டைரக்டர்கள் மாதிரி நடிச்சுக்காட்ட தெரியாது. நடிச்சுச்காட்டுய்யான்னு சொன்னா ஹி..ஹி..என்று நிற்பான்.

Advertisment

v

24ம் புலிகேசி படத்துக்கு ரெண்டு வருசமா அவனோட உட்கார்ந்து கதைக்குள்ள இறங்கி வொர்க் பண்ணியிருக்கிறேன். இப்ப வந்து நான் சொல்லுறது கேளுன்னு சொன்னா எப்படி? பெரிய டைரக்டர்கிட்ட ரொம்ப போக முடியாது. சின்ன ஆளுன்னுதான் நானும் முழுசா இறங்கி கதையை ரெடி பண்ணுனேன். மூணு கேரக்டரா இருந்தா நல்லா இருக்கும் என்று சொல்லி அதை மாதிரியே செய்தோம்.

ஷூட்டிங் ஆரம்பிச்சு ஒரு பாட்டுதான் எடுத்தோம். அதுக்குள்ள எனக்கு உடை தைப்பவனை விரட்டி விடுறாங்க. என் மேக்கப் மேனை விரட்டி விடுறாங்க. கத்தி சண்டை சொல்லித்தருபவரை விரட்டி விடுறானுங்க. என்னை என்கரேஜ் பண்ணுரை ஆளை எல்லாம் விரட்டி விட்டுவிட்டு, சிம்புதேவன்னு ஒரு பையன் இருக்கான்ல....அவன் பாக்குறான்.

v

ஷங்கர் அதை மாத்துங்க, இதை மாத்துங்கனு சொல்லுறாறுன்னு சொல்லிக்கிட்டே இருந்தான். என் ஆளுங்களையும் தூக்கிட்டான். நான் அப்பத்தான் கேட்டேன். அவர் சொல்லுறாரு அவர் சொல்லுறாருன்னா அவரே டைரக்ட் பண்ணட்டுமே. நீ எதுக்கு இடையில..’ன்னு கேட்டேன்.

பஞ்சாயத்து போய்க்கிட்டு இருக்கு. தப்பான 10 பேரு உட்கார்ந்துக்கிட்டு வடை திண்ணுக்கிட்டு சினிமாவ கெடுக்குறானுங்க. எனக்கும் ஆதரவா சில பேரு இருக்காங்க. என்னை கூப்பிடுறானுங்க. எதுக்கு கூப்பிடுறானுங்கன்னு தெரியல. வந்து காலுல விழுன்னு கூப்பிடுறானுங்களான்னு தெரியல.

நான் சொல்லுறதத்தான் கேட்கணும்னு என்கிட்ட வந்தா அது நடக்காது. அதுக்கு வேற புது ஆளப்பாரு. என்னையும் கலந்துகிட்டு வர்றதா இருந்தா இந்த படம் தொடரும். நீ சொல்லுறத மட்டும் கேட்டு நடிக்கிறதுக்கு இது ஆக்‌ஷன் படம் இல்ல. ஷங்கர் பண்ணுறது மாதிரி இது கிராபிக்ஸ் படமல்ல. இது ஹிஸ்டாரிக்கல் படம். என்னோட உடல்மொழி, என்னோட இன்வால்வ்மெண்ட் ரொம்ப முக்கியம். வடிவேலுவுக்கு உடல்மொழிதான் தேவை. வடிவேலுவுக்கு சிஜி தேவையில்ல.

எனக்கு வாய்ப்பு தந்தா தமிழ் சினிமாவுல நடிப்பேன். எனக்கு ஹாலிவுட்டுலே இருந்தும் அழைப்பு வருது. பேசாம அங்க போயிடபோறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

vadivelu sankar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe