தமிழகத்திற்கு புதிய டிஜிபி; சென்னைக்கு புதிய காவல் ஆணையர் - அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

Shankar Jiwal appointed as Tamil Nadu DGP

தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இறையன்பு பணிபுரிந்து வரும் நிலையில் அவர் நாளையுடன் ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

அதேபோல் தமிழக டிஜிபியாக பொறுப்பு வகிக்கும் சைலேந்திரபாபு விரைவில் பணி ஓய்வு பெற இருக்கும் நிலையில் தற்பொழுது சென்னை காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தமிழகடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவைபூர்வீகமாக கொண்ட சங்கர் ஜிவால், 1990 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். சேலம், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், திருச்சி மாநகர காவல் ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். அதேபோல் மத்திய அரசின் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் மண்டல தலைவராகவும் இருந்துள்ளார். உளவுத்துறை ஐஜியாகவும் பணியாற்றியுள்ளார். ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால்சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிப் படையின் தலைவராகவும் இருந்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டு 3 ஆண்டு காலமாக பணியாற்றி வந்தார். சிறந்த காவல் சேவைக்கான காவலர் பதக்கத்தை 2007 ஆம் ஆண்டும்,குடியரசுத் தலைவர் காவலர் பதக்கத்தை 2019 ஆம் ஆண்டும்பெற்றவர்.

அதேபோல் சென்னையின் காவல் ஆணையராகசந்தீப் ராய் ரத்தோட்நியமிக்கப்பட்டுள்ளார்.

dgp ips police TNGovernment
இதையும் படியுங்கள்
Subscribe