Advertisment

''இந்த பாட்டுக்கு உதாரணமாக வாழ்பவர்கள் சக்தி மசாலா சாந்தியும், துரைசாமியும்''-நடிகர் சிவக்குமார் பேச்சு

publive-image

ஈரோட்டில் இயங்கி வரும் சக்தி மசாலா நிறுவனங்களின் ஒரு அங்கமான சக்திதேவி அறக்கட்டளையின் 24 வது ஐம்பெரும் விழா ஈரோடு சக்தி துரைசாமி திருமண மண்டபத்தில் நடந்தது.

Advertisment

திருப்பூர் பாப்பீஸ் குழுமத்தை சேர்ந்த செல்வீஸ்வரிசக்திவேல் குத்துவிளக்கேற்றினார். சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் முனைவர் பி.சி. துரைசாமி வரவேற்றார். வாழ்நாள் சாதனையாளர் விருது, மரங்களின் காவலர் விருது மற்றும் பதக்கம், 2022–23 ம் கல்வி ஆண்டில் முதல், இரண்டாம் பிடித்த மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி, திரைப்பட நடிகர் சிவக்குமார் பேசியதாவது, 'கடந்த 2500 ஆண்டுகளுக்கு முன் நாக்கீரன் ஒரு பாடலில் சொல்லி உள்ளார். அளவு கடந்த சொத்து சேர்ந்து விட்டால், அது குடும்பத்திற்கு போக மீதி சமுதாயத்துக்கு பங்கு போட்டுக்கொள், இல்லை என்றால் அந்த சொத்தே உன்னை அழித்து விடும். இந்த பாட்டுக்கு உதாரணமாக சக்தி மசாலா சாந்தியும், துரைசாமியும் வாழ்ந்து வருகிறார்கள்'' என்றார்.

Advertisment

வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற திருப்பூர் பாப்பீஸ் குழுமங்களின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் ஆ. சக்திவேல், அரிமா கூட்டு மாவட்ட முன்னாள் தலைவர் முத்துசாமி, திண்டல் பாரதி வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் டாக்டர் எல்.எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.

விழாவில், 338 மாணவ, மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை, பொருளாதாரத்தில் பின்தங்கிய 748 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளைக்கு ஆம்புலன்ஸ் இமயம் காப்பகம், கொங்குநாடுஅறக்கட்டளை, ஈரோடு மிட்டவுன் சேரிடபுள் மற்றும் சர்வீஸ் டிரஸ்ட், சென்னை கொங்கு அறக்கட்டளை, ரோட்டரி திருப்பூர் பிரைம் டிரஸ்ட் என சமுதாய பணிகளுக்காக ரூ.1 கோடியே 37 லட்சத்து 22 ஆயிரத்து 125 ரூபாய் நலத்திட்டம் வழங்கப்பட்டது.

விழாவில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை சாந்திதுரைசாமி, டி.செந்தில்குமார், தீபா செந்தில்குமார், இளங்கோ, வேணுகோபால் மற்றும் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

sivakumar Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe