ADVERTISEMENT

கரோனா நிவாரண நிதிக்கு சக்தி மசாலா நிறுவனம் 5 கோடி நிதியுதவி!

06:07 PM May 16, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசிகளை தமிழக அரசு உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் கொள்முதல் செய்து வருகிறது. அதேபோல் பல்வேறு தரப்புகளில் இருந்து முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்துவருகின்றனர். இந்நிலையில் சக்தி மசாலா நிறுவனம் சார்பில், கரோனா நிவாரண நிதியாக ரூபாய்.5 கோடி தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சக்திமசாலா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஈரோட்டில் உள்ள சக்தி மசாலா நிறுவனம் பல்வேறு சமூக பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. கரோனா முதல் அலை வந்த கடந்த ஆண்டும் , பல்வேறு நிவாரணப்பணிகளில் முழு மூச்சுடன் செயல்பட்டார்கள். இந்த ஆண்டும் சக்தி மசாலா நிறுவனம் பல்வேறு கெரோனா நிவரண பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

தமிழகத்தில் கரோனா பேரிடர் எதிர்கொள்ள நிவாரண நிதியாக அனைவரும் பங்களிப்பு செய்ய வேண்டும் என ஊடகங்கள் வாயிலாக முதல்வர் ஸ்டாலின், கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி, சக்தி மசாலா நிறுவனம் சார்பில் ரூ.5 கோடி நிவாரண நிதியை தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு மே.,15 ம் தேதி வங்கி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து முதல்வருக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்கள்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையின் கீழ் அமைச்சர்கள், எம்எல்ஏ.,கள், சுகாதாரம், வருவாய் துறை, காவல்துறை, உணவு வழங்கல் துறை, தொழிலாளர் நலத்துறை, தீயணைப்பு துறை, மாநில பேரிடர் மேலாண்மை துறை, உள்ளாட்சி துறை, அனைத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், களப்பணியாற்றி வரும் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர், தன்னார்வலர்கள்,தொண்டு நிறுவனங்கள் போன்ற அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகளில் போர்க்கால அடிப்படையில் இரவு. பகலாக ஓய்வின்றி சிறப்பாக பணிபுரிந்து வருவதை சக்தி மசாலா நிறுவனம் சார்பில் வணக்கத்தையும், பாராட்டும், நன்றியும் தெரிவித்து கொள்கிறது'' இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கூடிய விரைவில் கரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு பொதுமக்கள் அனைவரும் நலமுடன் வாழ இறைவனை வணங்கி வேண்டுகிறது சக்தி மசாலா நிறுவனம், என அதன் நிர்வாக இயக்குனர்கள் பி.சி துரைசாமி, சாந்தி துரைசாமி தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT