Published on 26/11/2020 | Edited on 26/11/2020

அரசுப் பள்ளியில் படித்து பன்னிரண்டாம் வகுப்பில் தேர்வு பெற்று, பிறகு நீட் தேர்வில் வெற்றிபெற்ற ஈரோட்டைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 4 மாணவ மாணவியர்களுக்கு, ஈரோட்டைச் சேர்ந்த பிரபல சக்தி மசாலா நிறுவனம் அதன் அறக்கட்டளை மூலம் உதவ முன்வந்துள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற, 4 மாணவ மாணவியருக்கு தலா 25,000 ரூபாய் ரொக்கமாகக் கொடுத்து மொத்தம் நான்கு பேருக்கும் ஒரு லட்சம் ரூபாய் சக்தி மசாலா நிறுவனம் அதன் அறக்கட்டளை மூலம் கொடுத்துள்ளது. இந்த நிகழ்வில் சக்தி மசாலா நிறுவன இயக்குனர்களான துரைசாமி, சாந்தி துரைசாமி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.