தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி கடந்த இரண்டு சீசனைப் போலவே சீசன் 3யும் மக்கள் மத்தியில் பிரபலமாக போய்க்கொண்டிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

Advertisment

Shakshi is out from the Bigg Boss house!

இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன் மற்றும் ரேஷ்மா இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் நடிகர் சரவணன் திடீரென்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதற்கு பெண்களை பற்றிய சரவணன் தெரிவித்த கருத்தே காரணம் என்று சொல்லப்பட்டது. வெளியேறும் போது கன்ஃபெஷன் ரூமின் மற்றொரு கதவு வழியாக அழைத்து செல்லப்பட்டார்.

அப்போது சரவணனின் கண்களை கறுப்புத் துணியால் கட்டி, அழைத்து சென்றனர் நிகழ்ச்சி குழுவினர். வரும் சனிக்கிழமை சரவணன் வெளியேற்றப்பட்ட முழு காரணம் தெரியும் என்று கூறிவருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் மீதம் மூன்று பேர், ஷாக்சி, அபிராமி,லாஸ்லியா உள்ளிட்டோர் நாமினேஷனில் உள்ளனர். இந்தவாரம் ஷாக்சி வெளியேறி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. சென்ற வாரம் எவிக்ட் ஆன மீரா, ரகசிய அறையில் வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வெளியேறினார். இந்த வாரம் ஷாக்சி ரகசிய அறை செல்வாரா அல்லது வெளியேறுவாரா அல்லது வேறு முடிவு எடுக்கப்படுமா என்பது இன்று தெரியும்.சில நாட்களுக்கு முன்பு வைல்ட் கார்டு என்ட்ரியில் நடிகை கஸ்தூரி பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.