கரூரில் இரண்டு முறை நில அதிர்வுடன் அதிகப்படியான சத்தம் வெளிப்பட்டது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பிற்பகல் சுமார் 3.30 மணிக்கு பிறகு திடீரென இரண்டு முறை பெரும் சத்தமும் அதனால் ஏற்பட்ட நில அதிர்வும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் நிலநடுக்கம் போன்ற அதிர்வு உணரப்பட்டதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.
வீடுகள், கடைகள் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் நிலஅதிர்வால்ஆட்டம் காணும்காட்சிகளும் வெளியாகி வருகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் முறையான பதிலைக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் கரூர் பகுதி மக்கள்.