தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதை தொடர்ந்து வேட்பு மனு தாக்கலும் தொடங்கி, நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்தேனி மாவட்டம் ஸ்ரீரங்கபுரம் ஊராட்சியில் 9 வார்டு உறுப்பினர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடுவோரை குலுக்கல் முறையில் கிராம மக்கள் தேர்வு செய்தனர். பஞ்சாயத்து தலைவர் பதவி பட்டியல் இனத்தோருக்கு ஒதுக்கிய நிலையில், அச்சமூகத்தினர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்தனர்.