child rape

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

6-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியைபாலியல் வன்கொடுமை செய்த 58 முதியவரால் அந்த சிறுமிக்கு பாலியல் தொற்று பரவியதை அடுத்து அவனுக்கு சாகும்வரை சிறைத்தண்டனை விதித்துள்ளதுநீதிமன்றம்.

Advertisment

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு செம்மங்குட்டையை சேர்ந்தவன் 56 வயதான ராமையன். ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்த ராமையன் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதிஅதேபகுதியில் அவனை போலவே ஆடு மேய்க்க தாயுடன் வந்த 6-ஆம் வகுப்பு சிறுமியை தாய் வீட்டிற்கு சென்ற நேரத்தில் நைசாக பேசி காட்டின் புதருக்குள் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான் அந்த கொடூரன்.

child rape

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இதனை அடுத்து சம்பந்தப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.மேலும் போலீசிலும் புகார் செய்யப்பட்டநிலையில் தலைமறைவாக இருந்த காமக்கொடூரன் ராமையாவை போலிஸார் கைது செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுமிக்கு காயம் எளிதில் ஆறவில்லை என்பதால் அவருக்கு இரத்த பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த பரிசோதனையில் அந்த சிறுமிக்கு ஜெனிடல் கர்வீஸ் எனப்படும் பாலியல் நோய் தாக்கியது கண்டறியப்பட்டுள்ளது. கொடூரன் ராமையன் இந்தவகை பாலியல் நோயினால் பாதிக்கப்பட்டவன் இதனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில் அந்த தொற்று அச்சிறுமிக்கும் பரவியுள்ளது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்துவந்த தஞ்சை மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன் கொடூரன் ராமையாவிற்கு பாலியல் வன்கொடுமை செய்ததற்கு ஒரு ஆயுள் தண்டனையும், பாலியல் நோய் பரப்பியதற்கு ஒரு ஆயுள் தண்டனையும் கொடுத்து தீர்ப்பளித்து சாகும் வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.