Advertisment

பட்டப்பகலில் வீடு புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை: வாலிபரை கும்மி எடுத்த பொதுமக்கள் 

Sexual harassment for a woman

சென்னை விமான நிலையம் அருகே திரிசூலம் பகுதியைச் சேர்ந்தவர் 31 வயதான முத்துக்குமார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் டிரைவராக பணியாற்றி வருகிறார். வழக்கம்போல பணி முடிந்து வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார்.

Advertisment

அப்போது தனது வீட்டிற்கு அருகே சென்றபோது, தனது தெருவில் உள்ள ஒரு வீட்டில் இளவரசி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 35) என்ற பெண் தனது குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார்.

Advertisment

தெருவில் நடந்து வந்த முத்துக்குமார் இதனை கவனித்து, சுற்றும் முற்றும் பார்த்து யாரும் இல்லாத நேரத்தில் திடீரென்று இளவரசி வீட்டிற்குள் நுழைந்து, அவரை பின்பக்கமாக அனைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்தப் பெண் தன்னை காப்பாற்றுமாறு கத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். சுனைனா வீட்டிற்குள் நுழைந்து, முத்துக்குமாரை பிடித்து வீட்டிற்கு வெளியே இழுத்து வந்தனர். அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இதுகுறித்து பல்லாவரம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தும், போலீசார் சம்பவ இடத்தற்கு வந்தனர். போலீசாரிடம் முத்துக்குமாரை பொதுமக்கள் ஒப்படைத்தனர். முத்துக்குமாரை கைது செய்து பல்லாவரம் காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

woman harassment Sexual
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe