Advertisment

ஊர் முகப்பில் டாஸ்மாக் ;போதையில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை!! பொதுமக்கள் போராட்டம்!!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ரெட்டியூர் கிராமத்தை சேர்ந்த சதாசிவம் என்வரது மகள் கண்ணகி(17) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் அதே ஊரில் உள்ள அரசு பள்ளில் பன்னிரென்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 9-ந்தேதி மாலை 6 மணிக்கு அவரது வீட்டுக்கு அருகில் உள்ள வாய்காலில் தண்ணீர் எடுக்க சென்றுள்ளார். அப்போது அதே ஊரை சேர்ந்த பிரகாஷ்(24) என்ற காமகொடுரன் ஊரின் முகப்பில் உள்ள டாஸ்மாக் கடையில் குடித்து விட்டு தண்ணீர் எடுக்க சென்ற மாணவியை வாய்காலில் தள்ளி பாலியல் சீண்டல் செய்துள்ளான். அப்போது மாணவி காமகொடுரனிடமிருந்து தப்பிக்க முயற்சித்தபோது தவறான இடங்களில் தொட்டதால் வலி தாங்க முடியாத மாணவி சத்தம் போட்டுள்ளார். சத்தத்தை கேட்ட அருகில் இருந்தவர்கள் அவனை பிடித்து காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவகல்லூரி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கபட்டனர். மருத்துவர்கள் கற்பபை பாதிக்கப்பட்டுள்ளது என்று தையல்போட்டு சிகிச்சை அளித்துள்ளனர்.

Advertisment

protest

பிரகாஷ் மீது சேத்தியாதோப்பு மகளிர் காவல் நிலையத்தில் போக்ஸோ சட்டத்தின் 501- வது சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் சம்பந்தபட்ட டாஸ்மாக் கடையால் இதுபோன்ற சமூக விரோதிகள் குடித்துவிட்டு இந்த வழியாக வரும் பள்ளி மாணவ மாணவிகளிடமும், பொதுமக்களிடம் தீய செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே இந்த டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும் என்று அந்த பகுதியிலுள்ள பொதுமக்கள், மாதர் சங்க மாவட்ட செயலாளர் தேன்மொழி, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் நாசர், விதொச மாவட்ட செயலாளர் பிரகாஷ், மார்க்சிஸ்ட் கட்சியின் காட்டுமன்னார்கோவில் வட்டசெயலாளர் இளங்கோ, முஸ்லீம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் பெக்மான்,டிபிஐ ஒன்றிய துணைச்செயலாளர் இன்பதமிழன் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் டாஸ்மாக் கடையின் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

protest

இதுகுறித்து இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் தேன்மொழி மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. சம்பந்தபட்டவர் மீது கடுமையான தண்டனை அளிக்கவேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும். ஆண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் பெண்களிடமும், பெண்குழந்தைகளிடமும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று கூறி வளர்க்க வேண்டும் என்றார்.

sexual harassment Sexual Abuse
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe