Advertisment

முகத்தில் சுவரொட்டி பசையை பூசி பாலியல் வன்கொடுமை செய்து மூதாட்டி கொலை!!

தேனியில் 57 வயது மூதாட்டியை பலாத்தகாரம் செய்து கொலை செய்த நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Advertisment

Sexual Harassment to old women in theni

தேனி ஓடை தெருவில் வசித்து வரும் 57 வயது மூதாட்டி சாந்தி. இவர் அந்த பகுதியில் உள்ள உழவர் சந்தையில் சிறு சிறு வேலைகள் செய்துகொண்டு வாழ்ந்துவந்தார். இவரை நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர்கைகளைகயிற்றால்கட்டி சுவற்றில் சுவரொட்டி ஒட்ட பயன்படுத்தப்படும் பசையை முகத்தில் பூசி பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர்.

Advertisment

Sexual Harassment to old women in theni

காலையில்உழவர் சந்தைக்கு வந்த வியாபாரிகள் மூதாட்டியின் சடலத்தை பார்த்து அதிர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த காவல்துறையினர் மூதாட்டியின் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரிக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனர். மேலும் குற்றவாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

police Sexual Abuse Theni
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe