நெல்லையின் ராமையன்பட்டிப் பகுதியின் கோபாலபுரம் ஏரியாவிலிருப்பவர் திவான் மைதீன் என்ற டோனி (51) கூலித்தொழிலாளியாக இருப்பவர். சம்பவத்தின் போது அதே பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய மாற்றுத் திறனாளிச் சிறுமி, அருகிலுள்ள கடைக்கு மிட்டாய் வாங்கச் சென்றிருக்கிறாள்.

Advertisment

 Sexual harassment of minor girl ... 5 years jail and fine

வெகுநேரமாகியும் அச்சிறுமி வீடு திரும்பாததால் அவளின் பெற்றோர்கள் சிறுமியைத் தேடியிருக்கிறார்கள். அது சமயம் சிறுமி, திவான் மைதீன் வீட்டிலிருந்து அழுது கொண்டே வெளியே ஒடி வந்திருக்கிறாள். அவள் தெரிவித்ததை அறிந்து அதிர்ச்சியான பெற்றோர்கள் புறநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் திவான் மைதீன் சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது தெரியவந்தது. அதையடுத்து அவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்தனர்.

Advertisment

இந்த வழக்கு நெல்லை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி இந்திராணி விசாரித்து, திவான் மைதீனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையுடன் 5 ஆயிரம் அபாரதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ50,000 ஆயிரம் அரசு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் பொருட்டு அரசு சார்பில் அரசின் வழக்கறிஞர் பால்கனி ஆஜரானார்.

Advertisment