Advertisment

வெளிமாநில இளம்பெண்ணுக்கு  பாலியல் தொல்லைக்கொடுத்த கும்பகோண இளைஞர்கள் கைது;

train

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7394694274"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

கும்பகோணத்திற்கு நள்ளிரவில் ரயிலில் தனியாக வந்திறங்கிய இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கும்பகோணம் நீதிமன்றத்தில் ரகசிய வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது.

வட மாநிலத்தை சேர்ந்த, சுமார் 23 வயது மதிக்கத்தக்க இளம் பெண் கடந்த 2ம் தேதி இரவு சென்னையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் கும்பகோணம் வந்துள்ளார். கும்பகோணம் ரயில் நிலையத்தில் சுமார் 12 மணியளவில் இறங்கிய அந்த பெண் தங்கும் விடுதிக்கு செல்வதற்காக அங்கிருந்த ஆட்டோவை அழைத்துள்ளார். ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு, செல்போனில் பேசிக்கொண்டே சென்றுள்ளார். சில நிமிடத்தில் ஆட்டோவை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பின்தொடர்ந்து வந்துள்ளனர். அதை கவனித்த இளம்பெண் ஏதோவிபரீதம் நடக்கப்போகிறது என நினைத்து ஆட்டோவிலிருந்து குதித்துள்ளார்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="2374301885"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவரும் இளம்பெண்னுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர். அவர்களின் பிடியிலிருந்து தப்பிய இளம்பெண் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இன்று காலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர். தினேஷ், வசந்த், புருசோத், அன்பரசன், ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கும்பகோணம் நீதிமன்றத்தில் குற்றவியல் நீதிபதி ரகசியமாக வாக்குமூலமும் பெற்றார் இந்த சம்பவம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பாதிக்கப்பட்ட பெண் கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கியில் அலுவலராக பயிற்சி பெற வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="2439263953"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

sexual harassment Train
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe