pream

நேற்று நள்ளிரவு சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் திருவனந்தபுரத்தை சேர்ந்த அபிலாஷ் என்பவரின் குடும்பம் பயணித்தது. அந்த ரயில் பெட்டியில் இருந்த ஒருவர் ரயில் கிளம்பியதிலிருந்து பெண்களிடம் அநாகரீகமாக நடந்து வந்திருக்கிறார்.

Advertisment

நள்ளிரவு நேரத்தில் ரயில் சேலத்தை தாண்டி ஈரோடு வரும்போது அதில் பயணித்த 9 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி அச்சமடைந்து அழுதுள்ளார். அந்நேரத்தில் அச்சிறுமியின் அழுகுரல் கேட்டு எழுந்த பயணிகள் அச்சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட நபரை பிடித்து விசாரித்துள்ளார்கள். தொடர்ந்து அந்த நபரை ஈரோடு ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள். அச்சிறுமியின் பெற்றோரான அபிலாஷ் கொடுத்த புகாரின் பேரில் சென்னை பெசண்ட் நகரை சேர்ந்த பிரேம் ஆனந்த் என்பவரை கைது செய்துள்ளார்கள். சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல் செய்த நபரான பிரேம் ஆனந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment