Advertisment

கட்டிப்பிடிப்பது, முத்தமெல்லாம் பெரிய விசயமா? தட்டி கேட்ட பெண் ஊழியருக்கு 64 வயதாகும் கல்லூரி ஓனரின் பதில்

Sexual harassment for a female servant

Advertisment

கோவையை அடுத்த சரணவம்பட்டியைச் சேர்ந்தவர் புனிதா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது).23 வயதாகும் இவர் திருமணம் ஆகாதவர். இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் அலுவலக பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் மிக பிரபலமான இந்த கல்லூரியின் நிர்வாக இயக்குனர் சுப்பரமணியம்.64 வயதான இவர் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் இளம்பெண்களை பின்னால் சென்று கட்டிப்பிடிப்பதும், முத்தம் கொடுப்பதுமாக இருந்து வந்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அங்கு பணிபுரிந்த பல பெண்களிடம் பாலியல் ரீதியாக பல்வேறு தொல்லைகளை செய்து வந்துள்ளார். தங்களது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு பணிக்கு வரும் இளம் பெண்கள் பலர் இவரது பாலியல் தொந்தரவு பொறுக்க முடியாமல் வேலையை விட்டு சென்றுள்ளனர்.

குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த இரண்டு வருடமாக பணிபுரிந்து வரும் புனிதாவுக்கு பலமுறை பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இதுகுறித்து நிர்வாக இயக்குனர் மகனும், கல்லூரியின் தலைமை நிர்வாகியமான நளினிடம், கூறியபோது, வெளிநாட்டில் பெண்களை கட்டிப்பிடிப்பது முத்தம் கொடுப்பது மிகப்பெரிய விஷயம் அல்ல, அதனால் போய் வேலையைப் பாருங்கள். இல்லையென்றால் வேலையை விட்டு தூக்கி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். நளினின் பதில் சுப்பிரமணியனின் பதிலாகவே இருந்தது.

Advertisment

suramaniyan

கல்லூரியின் நிர்வாக இயக்குனர் சுப்பரமணியம்

இதனால் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட புனிதா தனது நண்பர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி அழுதுள்ளார். நண்பர்களின் அறிவுரைப்படி நிர்வாக இயக்குனரின் பாலியல் தொந்தரவுகளை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்ட ரகசிய கேமராக்கள் மூலம் அவரது சில்மிஷங்களை பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் பணியை விட்டு நிறுத்தியதுடன் பல்வேறு வகைகளில் தொந்தரவு கொடுத்து வந்துள்ளது. இதனால் உயிருக்கு பயந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு பாலியல் தொந்தரவு கொடுத்த நிர்வாக இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோவையை அடுத்த துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

thudiyalur

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கும் வகையில் உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் என்னதான் பல சட்டங்களை கொண்டு வந்தாலும், பெண்களின் இயலாமையை பயன்படுத்திக் கொள்ளும் ஒரு சிலரால் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. அதுவும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய கல்வி சீமான்களே பல பெண்களின் வாழ்வைக் கெடுக்கும் சூழ்நிலையில் தற்சமயம் தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

college covai Female harassment servant Sexual
இதையும் படியுங்கள்
Subscribe