Advertisment

பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டல்; நிருபர் கைது!

சேலம் அன்னதானப்பட்டி இட்டேரி சாலையைச் சேர்ந்தவர் பாலகுமார் (33). இவர், 'வணிக வளர்ச்சி' என்ற பெயரில் மாத இதழ் நடத்தி வருகிறார். அப்பத்திரிகையின் ஆசிரியராகவும், செய்தியாளராகவும் உள்ளார்.

Advertisment

Sexual harassment of a female employee; Reporter arrested!

தனது வீடு அருகிலேயே பத்திரிகை அலுவலகம் நடத்தி வருகிறார். அந்த அலுவலகத்தில், சேலத்தை அடுத்த காரிப்பட்டியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் வேலை செய்து வந்தார்.அந்தப் பெண்ணிடம் பாலகுமார் இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசி வந்ததுடன், அடிக்கடி பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து அந்தப்பெண், அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து, காவல்துறை நடத்திய விசாரணையில், பெண் ஊழியரிடம் பாலகுமார் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் இன்று (ஜூலை 11, 2019) கைது செய்தனர்.

Salem sexual harassment
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe