Sexual harassment

குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி தாயை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னை மண்ணிவாக்கத்தில் மொய்தீன் என்பவர் வீட்டில் ரவுடிகள் சிலர் திடீரென நுழைந்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்த மொய்தீனை கத்தியால் சில இடங்களில் வெட்டியுள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய அவர்கள், மொய்தீன் மனைவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர்.

Advertisment

அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்து பாபு என்பவர் வந்துள்ளார். அவரையும் ரவுடிகள் கத்தியால் வெட்டியுள்ளனர். மொய்தீன், பாபு ஆகியோர் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மொய்தீன் மனைவி மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.