jail

திருச்சி கீழ அம்பிகாபுரம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் பாலகுரு. பாலகுருவுக்கு மாலதி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். பாலகுரு கடந்த 2013ஆம் ஆண்டு காலமானார். இதனால் மாலதி தனது குழந்தைகளுடன் பாலகுரு வீட்டிலேயே இருந்தார்.

Advertisment

கணவர் இல்லாமல் வாழ்ந்து வந்த மாலதிக்கு மாமனார் சண்முகம் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பாலியல் தொல்லை தாங்க முடியாத மாலதி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டிக்கு சென்றுவிட்டார்.

Advertisment

இந்த நிலையில் மாலதி வீட்டிற்கு சென்ற சண்முகம், அங்கு மாலதியின் பெற்றோர் இல்லாத நேரத்தில் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாலதி போலீஸ் துணை ஆணையர் அலுவலத்தில் புகார் அளித்தார்.

இந்த புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி பொன்மலை காவல்நிலையத்திற்கு போலீஸ் துணை ஆணையர் அலுவலம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி பொன்மலை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி சண்முகத்தை கைது செய்தனர்.

Advertisment