Advertisment

மாணவி வளர்மதி மீது பாலியல் தாக்குதல் நடத்திய போலீஸ் பொறுக்கிகள் தண்டிக்கப்படவேண்டும்; பெண்கள் கூட்டமைப்பு காட்டம்!

கேரள வெள்ள நிவாரண நிதியை திரட்டு பணியில் ஈடுபட்ட மாணவி வளர்மதியை பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்திய போலீசாரை கண்டித்து பெண்கள் கூட்டமைப்பினர் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

Advertisment

சென்னை மெட்ரோ ரயில் நிலையம் முன்பு கேரள வெள்ள நிவாரணப் பிரச்சாரத்தில் மாணவி வளர்மதி, அருந்தமிழன்,காளிமுத்து,சாஜன் கவிதா ,மணிகண்டன் ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது தங்களை புகைப்படம்எடுத்தது குறித்து கேள்வி எழுப்பவே வளர்மதி மீது பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அதன் பின்னர் கைது செய்து அழைத்து சென்ற போது உளவுத்துறை அதிகாரி ஸ்டாலின்,சிவராஜ் ஆகியோர் தாகாத முறையில் நடந்துள்ளனர். அதன் பின்னர் பெண் காவலர்கள் கீதா ,வேதநாயகி ஆகியோர் உடல் அளவிலும்,மனதளவிலும் மாணவிவளர்மதியைகடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் பெண்கள் எழுச்சி இயக்கம், இந்திய மாதர் தேசிய இயக்கம், பெண்கள் விடுதலை முன்னணி,மகளிர் விடுதலை இயக்கம், புதிய குரல், மனிதி, பெண் தொழிலாளர் சங்கம், இளம்தமிழகம், தமிழ்நாடு பெண்கள் இயக்கம், ஆம் ஆத்மி மகளிர் அணி, தமிழக மகளிர் அணி, திருநங்கையர்கள் மற்றும் திருநம்பிகள், தேசிய பெண்கள் முன்னணி ஆகியோர் சேர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது. பாஜகவின் கைபாவையாக செயல்பட்டு வரும் எடப்பாடி அரசு காவல்துறையை பயன்படுத்தி வளர்மதி மீது தாக்கல் நடத்தப்பட்டு இருக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. மக்களுக்கு எதிரான திட்டத்தை எதிர்த்து போராடிய மாணவி வளர்மதி மீது தாக்குதல் நடத்தி தொடர்ச்சியாக அடக்குமுறையை ஏவி வருகிறார்கள். அரசு போலீஸ் பொறுக்கிகளைக் கொண்டு போராடுபவர்களை ஒடுக்கிவருகிறது. ஒரு பெண்ணை கைது செய்யும் போது பெண் காவலர்கள் இல்லாமல் கைது செய்தது தவறு அது மிகவும் கண்டிக்கதக்கது. மாணவி வளர்மதி மீது பாலியல் ரீதியான தாக்குதல் நடத்திய காவல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

valarmathi police women safety
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe