தூத்துக்குடியில் மர்ம நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் சாலையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணியை பகுதியில் 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் சாலையில் மயக்கமான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரை மீட்ட பொதுமக்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்களின் சோதனையில் இளம்பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது கண்டறியப்பட்டது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண் மயக்கமான நிலையில் இருப்பதால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு மயக்கம் தெளிந்த பின் இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.பாலியல் வன்கொடுமை செய்த அந்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.