சென்னை வில்லிவாக்கத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை போஸ்கோசட்டத்தின்கீழ் மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த வாசுஎன்பவர் மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். 57 வயதான இவன். அடுத்த ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற இருக்கின்ற நிலையில் நேற்று இரவு வில்லிவாக்கத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை அழைத்துச் சென்ற ஆய்வாளர் வாசு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
அந்த சம்பவத்தின் போது கதறி அழுத சிறுமியின்சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து சிறுமியைகாப்பாற்றினர். அந்த இடத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளான்உதவி ஆய்வாளர் வாசு, சிறுமியிடம்நடந்ததுபற்றி விசாரித்த பொதுமக்கள் அதிர்ச்சியுடன் தப்பித்துச் சென்ற உதவி ஆய்வாளர் வாசுவை பிடித்து அந்த இடத்திலேயே தர்மஅடி கொடுத்துவில்லிவாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இருப்பினும் காவல் துறையினர் இது தொடர்பாகபுகார் ஏதும் பெறாமல் இருந்த நிலையில், இந்த தகவல் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும், அதேபோல் இந்த கொடூர செயலில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணை துவக்கவும் உத்தரவிட்டது உயர் அதிகாரிகள் தரப்பு.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
இந்த உத்தரவின் அந்த குழந்தையிடம் நடைபெற்ற விசாரணையில் கடந்த நான்கு மாதமாக தன்னைவிரட்டி வன்கொடுமை செய்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. சிறப்பு உதவியாளர் குறித்து விசாரணை செய்த வில்லிவாக்கம் போலீசார் போஸ்கோசட்டத்தில் வழக்குப் பதிந்து கைது செய்துள்ளனர்.
பொறுப்பில் உள்ளவர் அதுவும்காவலர் பொறுப்பில் உள்ளவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில்பெரும் அதிர்ச்சியையும், ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.