குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கல்குறிச்சியை சேர்ந்தவர் நிதின். கட்டித் தொழிலாளியான இவன், தனது பக்கத்து வீட்டை சேர்ந்த பிளஸ்-1 மாணவியை காதல் வலையில் வீழ்த்தி, 2 நாட்களுக்கு முன்னர் கடத்திச் சென்றுவிட்டான். தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே ஒரு வீட்டில் வைத்து, அந்த மாணவியை பலாத்காரம் செய்துள்ளான். கடத்தலுக்கு துணையாக இருந்த நண்பன் சாலமனும் (இவனும் கட்டிடத் தொழிலாளி)அந்த பெண்ணை வல்லுறவு செய்துள்ளான்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
விடிய விடிய 2 பேரும் அந்த பெண்ணை கொடூரமாக பலவந்தப்படுத்தி சித்ரவதை செய்துள்ளனர். இதற்கிடையே மாணவியை காணவில்லை என பெற்றோர் தரப்பு கொடுத்த புகாரின் பேரில், நிதினின் தொலைபேசி எண்ணை ட்ரேஸ் செய்துள்ளனர் போலீஸார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
அவனது செல்போன் சிக்னல் வல்லநாட்டை காட்டியதால், அங்கு வந்து இளம்பெண்ணை போலீஸார் மீட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடம் ஒதுக்குப்புறமான வீடு என்பதால், மாணவியால் உதவிக்கு யாரையும் அழைக்கமுடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.